Menu
Your Cart

மாறாது என்று எதுவுமில்லை

மாறாது என்று எதுவுமில்லை
-5 %
மாறாது என்று எதுவுமில்லை
பெஜவாடா வில்சன் (ஆசிரியர்), பெருமாள் முருகன் (தொகுப்பாசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி ‘காலச்சுவடு’ இதழில் (டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை ஒழிப்பு, துப்புரவுப் பணி ஆகியவை குறித்த பல்வேறு பார்வைகளையும் சட்டப் போராட்டங்களையும் அவர் பேசியுள்ளார். தனது அரசியல், சமூகப் பார்வைகளைப் பேசியுள்ளார். தன் தனிப்பட்ட வாழ்வு குறித்துப் பேசியிருக்கிறார். அவர் பேசியவை நமக்கு அறிவூட்டுகின்றன; புதுவெளிச்சத்தைக் கொடுக்கின்றன; மனசாட்சியை உலுக்குகின்றன. கழிவகற்றும் தொழிலுக்குப் பின்னால் செயல்படும் சாதிய மனோபாவத்தை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் எடுத்துக் காட்டுகிறார். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். எல்லோரது பொறுப்புணர்வையும் சுட்டிக் காட்டுகிறார். ‘மாறாது என்று எதுவுமில்லை’ என்கிறார் வில்சன். இதை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் குறைந்தபட்ச மாற்றமாவது உருவாகும் என்பது என் நம்பிக்கை. இதை நூலாக்கம் செய்வதற்கு இந்த நம்பிக்கையே காரணம்.
Book Details
Book Title மாறாது என்று எதுவுமில்லை (Maarathu Endru Yethuvumillai)
Author பெஜவாடா வில்சன்
Compiler பெருமாள் முருகன் (Perumal Murugan)
ISBN 9789355233011
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 128
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Interview | நேர்காணல், 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர..
₹190 ₹200
‘தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும..
₹790
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும..
₹314 ₹330
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விட..
₹248 ₹300